பொது செய்தி

இந்தியா

'ஷ்ராமிக்' சிறப்பு ரயிலால் வைரஸ் பரவியது': நிதி ஆயோக்

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

புதுடில்லி: 'நிதி ஆயோக்' கண்காணிப்பில் இருக்கும், 98 மாவட்டங்களில், 'ஷ்ராமிக்' சிறப்பு ரயில்களால் வைரஸ் தொற்று அதிகம் பரவியுள்ளதாக, அந்த அமைப்பு கூறியுள்ளது.



latest tamil news



நாட்டில், கல்வி, தொழில், சுகாதாரம், வேலை வாய்ப்பு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பின்தங்கிய, 112 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை முன்னேற்றும் நடவடிக்கைகள், நிதி ஆயோக் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இம்மாவட்டங்களில், புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் காரணமாக, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, பல மடங்கு உயர்ந்துள்ளதாக, நிதி ஆயோக் கூறியுள்ளது.

இது தொடர்பாக, அதன் அறிக்கை:நிதி ஆயோக் கண்காணிப்பின் கீழ் உள்ள, 112 மாவட்டங்களில், நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 20 சதவீதம் பேர் உள்ளனர்.இவற்றில், 98 மாவட்டங்களில், தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் மூலம், வைரஸ் பாதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது.


latest tamil news



பாதிப்பு குறைவாக இருந்த விருதுநகரில், 174 பேருக்கும், ராமநாதபுரத்தில், 111 பேருக்கும் ரயில்கள் இயக்கத்தால் தொற்று பரவி உள்ளது. இதன்படி, மே மாதம் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள், பல மாவட்டங்களில், வைரஸ் பாதிப்பை பல மடங்கு உயர்த்தி உள்ளன. பீஹாரின், 12 மாவட்டங்களில், 8ம் தேதி வரையிலான காலகட்டத்தில், வைரஸ் பாதிப்பு, 22.65 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnaraj - bangalore,இந்தியா
18-ஜூன்-202016:15:50 IST Report Abuse
krishnaraj True BUT Both Expatriates & Migrants-
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
18-ஜூன்-202015:58:55 IST Report Abuse
R.Kumaresan வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு..R.Kumaresan. பேருந்து மற்றும் ரயில்களை இயக்குவதால் வைரஸ் நோய் பரவாமல் இருப்பதாக தெரியவில்லை..R.Kumaresan.
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
18-ஜூன்-202011:16:55 IST Report Abuse
ஆனந்த் வைரஸ் பரவவில்லை .. வைரஸ் இருப்பவர்கள் புலம் பெயர்ந்தார்கள் .. அது சரி விமானம் மூலம் பரவவில்லையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X