சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மல்லாக்கோட்டையில் கர்ப்பிணி மரணம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை ராமகிருஷ்ணன் மகள் மகாதேவி 19 .இவர் அதே ஊரைச் சேர்ந்த உறவினரான துரைப்பாண்டி மகன் சசி பாண்டியராஜனை கடந்த 2019 செப்டம்பரில் திருமணம் செய்து கொண்டார்.

கணவர் சசி பாண்டியராஜன், மனைவியை அவரது தந்தை ராமகிருஷ்ணன் வீட்டில் விட்டு விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்று விட்டார். 6 மாத கர்ப்பிணியான மகாதேவி தனது தந்தை வீட்டில் இருந்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன் ஏற்பட்ட திடீர் வயிற்றுவலியால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மகாதேவி உடல்நிலை மோசமானதால் பெற்றோர் மல்லாக்கோட்டைக்கு கொண்டு வரும் வழியில்நேற்று காலை 4.30 மணிக்கு இறந்தார். திருமணமான பத்து மாதங்களில் கர்ப்பிணி இறந்ததால் எஸ்.எஸ்.கோட்டை போலீசார் ராமகிருஷ்ணன் வீட்டிலிருந்தமகாதேவி உடலை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன், மாவட்ட துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை மகாதேவி தந்தை ராமகிருஷ்ணன், சசி பாண்டியராஜன் தந்தை துரைபாண்டியிடம் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X