தேவிபட்டினம்:தேவிபட்டினம், ஆர்.எஸ்.மங்கலம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மார்ச் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பொதுமக்கள் மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டினர்.பெரும்பாலான கடைகளில் பாலிதீன் கவர்களிலேயே மளிகை மற்றும்காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.
கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன் பாலிதீன் ஒழிப்பில் ஆர்வம் காட்டிய உள்ளாட்சி அமைப்புகளும், வருவாய் துறையினரும், கொரோனா ஊரடங்கு காலத்தில் வைரஸ் கட்டுப்பாட்டில் தீவிர களப்பணியாற்றியதால், இந்த காலகட்டத்தில் வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் வழங்கிய அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் வைத்து அதிகாரிகளின் முன்னிலையிலேயே வழங்கிய நிலை பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன.தடை உள்ள நிலையில் இதன் பயன்பாட்டை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE