பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா காலத்தில் மக்களுக்கு அடிமேல் அடி விண்ணை தொடும் பெட்ரோல், டீசல் விலை

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கொலைகார கொரோனா மனித தலைகளை தேடித்தேடி வேட்டையாடும் நிலையில் அடிமேல் அடியாய் பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவு விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து, நம் தலைக்குமேல் கத்தியாக தொங்கி உயிரை ஊசலாட விட்டுக்கொண்டிருக்கிறது. இந்த விலை உயர்வால் படாதபாடுபடும் சிவகங்கை மாவட்ட மக்கள், கார், ஆட்டோ டிரைவர்கள், நிர்வாகிகள் பதிவு செய்த மனக்குமுறல்கள்...
குடும்பம் நடத்த முடியவில்லை

ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால், சவாரி கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும், ேஷர் ஆட்டோ கட்டணம் வெறும் 10 ரூபாய் தான். மேலும்,2 பேருக்கு மேல் ஆட்டோவில் ஏற்றக் கூடாது. சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து காஞ்சிரங்கால் வரை 2 பேரை மட்டும் ஏற்றிச் சென்றால், வெறும் 20 ரூபாய் தான் கிடைக்கும். இந்த சொற்ப வருமானத்தில் வீட்டு வாடகை, குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம், ஆட்டோ தவணைத் தொகை என அனைத்து செலவுகளையும் சமாளிக்க வேண்டும். வருமானம் இல்லாத நேரத்தில் இந்த விலை உயர்வு எங்களைப் போன்ற ஓட்டுனர்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாகும்.

எஸ்.நாகபிரபு, ஆட்டோ டிரைவர், சிவகங்கை

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 3 மாதங்களாக ஆட்டோக்கள் இயக்கப்படாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்து தான் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறதை போன்று ஏற்கெனவே போதுமான அளவிற்கு சவாரி கிடைக்காமல், வருமானம் கிடைக்காமல் திண்டாடிவருகின்றோம். இந்த நிலையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடிய முடியாத ஒன்றாகும்.விலை விலைவாசி உயர்ந்ததை போன்று ஆட்டோ கட்டணத்தை நினைத்த படி உயர்த்தி விட முடியாது.

பாலசுப்ரமணியன், ஆட்டோ டிரைவர், மானாமதுரை

டிரைவர்களுக்கு சோதனை காலம்

கொரோனா தமிழகத்தில் தற்போது தீவிரமாக பரவலாகி வருவதால் பொதுமக்கள் வெளியூர் செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும் பெரும்பாலானவர்கள் வீட்டில் சொந்தமாக கார் வாங்கி விட்டதால் ஏற்கெனவே வாடை கார், டூரிஸ்ட் வேன் வாகனங்களுக்கு போதுமான சவாரி இல்லாமல் ஸ்டாண்டுகளிலேயே முடங்கி கிடக்கின்றன.இந்நிலையில் வரும் சவாரி களிலும் தொழில் போட்டி காரணமாக குறைந்த வாடகைக்கு சென்று வருகின்ற நிலையில், வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் மாதத்தவணையை கூட கட்ட முடியாத நிலையில் தற்போது பெட்ரோல்,டீசல் விலை உயர்வு மேலும் எங்களை பாதித்துள்ளது.

ஆறுமுகம், கார் டிரைவர், மானாமதுரை

வருமானமின்றி தவிப்பு

ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக வருமானம் இன்றி தவித்து வருகிறோம். கடந்த 20 வருடங்களாக கார் ஓட்டி வருகிறேன். இதுபோன்ற ஒரு பொருளாதார பிரச்னையை நான் சந்தித்ததே இல்லை. வருமானம் இல்லாமல் தவிக்கும் இந்த நேரத்தில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு பேரிடியாக உள்ளது. தற்போது வெளியூர் செல்வதற்கு கடும் கட்டுப்பாடு நிலவுவதால்,சவாரி எதுவும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக செல்ல முடிவதில்லை.

கே.பாண்டி, கார் டிரைவர், சிவகங்கை

சாமானியர்களுக்கு கஷ்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடுத்தர மக்களை பொருளாதார ரீதியாக கடுமையாக பாதித்துள்ளது. மாதந்தோறும் ஒரு நிலையான வருமானம் பெறுபவர்களால் கூட இந்த விலை உயர்வை சமாளிக்க முடியவில்லை. அப்படியிருக்கும்போது, தினக் கூலி பெறும் சாமானிய மக்கள் எப்படி இதை சமாளிக்க முடியும். தற்போது ஊரடங்கு என்பதால், பலர் வருமானம் இன்றியும், வாழ்வாதாரத்தை இழந்தும் தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
என்.சத்யா, சிவகங்கை
சமாளிக்க முடியவில்லை
கொரோனாமற்றும் ஊரடங்கு காலத்தில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் வீட்டு செலவுகளையே சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகிறோம். இதற்கிடையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எப்படி சமாளிப்பது. நாங்கள் வீட்டில் இருந்தாலும், வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள், ரேஷன் கடை என அனைத்து இடங்களுக்கும் நாங்கள் தான் இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டியுள்ளது. அப்படி இருக்கும்போது, வீட்டு செலவுகளையும் சமாளித்து, இதுபோன்ற இதர செலவுகளையும் சமாளிப்பது மிகவும் கடினமான ஒன்று.
எஸ்.வசந்தி, சிவகங்கை

விலைவாசி உயரும்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்கெனவே காய்கறி மற்றும் மளிகை பொருள்களின் விலை கூடி விட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து கூடி கொண்டே வருவதால் மேற்கண்ட பொருட்களின் விலை இன்னும் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் ஏராளமானோர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வேலை இழந்து வரும் வேளையில் விலைவாசி உயர்வால் மேலும் சிரமப்பட்டு வருகிறோம்.

மனோகர், மானாமதுரை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X