கொரோனா காலத்தில் மக்களுக்கு அடிமேல் அடி விண்ணைத்தொடும் பெட்ரோல், டீசல் விலை

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கொலைகார கொரோனா மனித தலைகளை தேடித்தேடி வேட்டையாடும் நிலையில் அடிமேல் அடியாய் பெட்ரோல், டீசல் விலைஇதுவரை இல்லாத அளவு விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியபொருட்களின் விலையும் உயர்ந்து, நம் தலைக்குமேல் கத்தியாக தொங்கி உயிரை ஊசலாட விட்டுக்கொண்டிருக்கிறது. இந்த விலை உயர்வால் படாதபாடுபடும் ராமநாதபுரம் மக்கள், கார், ஆட்டோ டிரைவர்கள்,
நிர்வாகிகள் பதிவு செய்த மனக்குமுறல்கள்...


விலையை குறைக்க வேண்டும்

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறேன். அப்போது ஒரு லிட்டர் ரூ.20க்கு விற்றது, ரூ.80ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பால் ஏற்கனவே வருமானம் இன்றி
சிரமப்படுகிறோம். வண்டி ஓட்டமும் குறைந்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக
வாடகையும் வசூலிக்க முடியாது. பெட்ரோல், டீசல் உயர்வால் விலைவாசியும் உயரும்.
உடனடியாக விலையை குறைக்கமத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டி.புண்ணியகோடி, ஆட்டோ டிரைவர், ராமநாதபுரம்

சவாரி கிடைப்பது அரிது

ஒவ்வொரு நாளும் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக ஆட்டோ ஓட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. சவாரி கிடைப்பது அரிதாக உள்ளது. பயணிகளிடம் கூடுதல் கட்டணமும் வசூலிக்க முடியவில்லை. பெட்ரோல் விலை உயர்வை கூடுதல் செலவை சரிக்கட்டமுடியாத நிலையில்உள்ளோம். அடிக்கடி பெட்ரோல், டீசல் விலைஉயர்த்துவதை கைவிட வேண்டும்.

பி.ஆனந்த், ஆட்டோ டிரைவர், ராமநாதபுரம்


வாடகை நிர்ணயிக்க முடியவில்லை

ஊரடங்கில் சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் மண்டலத்திற்குள் இ பாஸ் இல்லாமல் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக டீசல் விலை உயர்ந்து
வருகிறது. இதனால் கார் வாடகை நிர்ணயம் செய்ய முடியாததால் நஷ்டத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுஉள்ளது.வெளியூர் செல்ல மக்கள் தயக்கம் காட்டுவதால் கார் வாடகைக்கு
செல்லாமலேயே உள்ளது. தனியார் வங்கியில் தவணை தொகை செலுத்த முடியாத சூழல்
ஏற்படுகிறது.

ரா.தங்கபாண்டியன், கார் டிரைவர், முதுகுளத்துார்


அதிகரிக்கும் செலவு

பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்துகொண்டே போகிறது. எங்களைப் போன்ற முகவர் தொழிலில்உள்ளவர்கள் பல இடங்களுக்கு அலைந்தால் தான் வாடிக்கையாளர்களை பிடிக்க முடியும். 2 லிட்டர் பெட்ரோல் போட்டால் ஒருவாரத்திற்கு வைத்துக் கொள்ளமுடியும். தற்போது கொரோனா பரவல் காரணமாக பஸ் போக்குவரத்து குறைவால் மக்கள் டூவீலர் களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
பி.செல்வக்குமார்,ராமநாதபுரம்


வீட்டு பட்ஜெட்டில் சிக்கல்

கடைக்கு சரக்கு வாங்க, சப்ளை செய்வதற்கு தினமும் ரூ.100 வரை பெட்ரோலுக்கு செலவிட வேண்டியுள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வீட்டு பட்ஜெட்டில் செலவு கூடுகிறது. காய்கறிகள், மளிகை பொருட்கள் விலையும் அதிகரித்து விடும். கொரோனா தொற்று பரவால் ஓட்டல்களுக்கு மக்கள் வருவது குறைந்துஉள்ளது. தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜி.பழனிக்குமார்,ராமநாதபுரம்

மக்களுக்கு கடும் பாதிப்பு

15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்து வந்த நிலையில்,
தற்போது தினமும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன. கொரோனா பாதிப்பில் வருவாய் இன்றி உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களையும் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளனர். ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் சவாரி இன்றி உள்ள நிலையில், இந்த விலை ஏற்றம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.அம்பா சாகுல் ஹமீது,ஆர்.எஸ்.மங்கலம்



தொழில் செய்ய முடியவில்லை

உயிரை பணையம் வைத்து மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு, இறால் மீனுக்கு உரிய விலை கிடைக்காமல் தவிக்கும் நிலையில், தினமும் எகிறும் டீசல் விலை உயர்வால் படகை இயக்க முடியாத அவலம் உள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் இலங்கையில் டீசல் ஒரு லிட்டர் ரூ.41க்கு விற்கின்றனர். ஆனால் இங்கு ரூ.72க்கு விற்பது வேதனைக்குரியது.

என்.ஜே.போஸ், ராமேஸ்வரம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X