கொரோனாவால் இறந்த முதியவரை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் கொரோனா பாதிப்பால் இறந்த முதியவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம் அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

ராமநாதபுரம் வனசங்கரியம்மன் கோயில் தெரு 83 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் ஜூன் 12ல் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் இரவு பலியானார். உடலை ராமநாதபுரம் அல்லிகண்மாய் சுடுகாட்டிற்கு உறவினர்கள் எடுத்து சென்றனர். அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்திரா, தாசில்தார் முருகவேல், டி.எஸ்.பி., வெள்ளத்துரை மக்களிடம் சமரசம் பேசினர். நள்ளிரவு 1:00 மணிக்கு அரசு விதிமுறைகளின்படி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பாக உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X