பொது செய்தி

தமிழ்நாடு

மின்கோபுரங்களின் உயரம் அதிகரிக்கும் திட்டம் கேள்விக்குறி

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கம்பம்,:யானைகள் மின்சாரம் தாக்கி பலியான வெண்ணியாறு வனப்பகுதியில் மின்கோபுரங்களின் உயரத்தை உயர்த்தும் திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது.

மேகமலை சரணாலயத்திற்குட்பட்ட வெண்ணியாறு வனப்பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன் 5 யானைகளும், ஒரு ஆண் யானை வண்ணாத்திப்பாறை வனப்பகுதியிலும் மின்சாரம் தாக்கி பலியானது. ஆய்வின் முடிவில் அதற்கு காரணமாக எண்கள் 47, 48 வழித்தடத்தில் வரிசையாக தாழ்வாக உள்ள 5 மின் கோபுரங்களின் உயரத்தை 40 அடியில் இருந்து 75 அடியாக உயர்த்த ரூ. 10 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற மதுரைகிளையில் இவ்வழக்கில் பலமுறை காலஅவகாசம் கேட்டனர். ஆனால் 2 ஆண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மின் வாரியத்தினர் கூறுகையில், 'பணிகள் செய்ய வனத்துறை முட்டுக்கட்டை போடுகிறது. இயந்திரங்கள் கொண்டு செல்ல முடியாத நிலையில் ஆட்களை வைத்து மட்டும் இப்பணியை செய்வது இயலாத காரியம்,'என்றனர்.

இதனால் திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது. இதன் காரணமாக யானைகளுக்கு மீண்டும் ஆபத்து காத்திருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X