பரமக்குடியில் உயிர் பலி வாங்கும் கழிவுநீர் குட்டை

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement
 பரமக்குடியில் உயிர் பலி வாங்கும் கழிவுநீர் குட்டை

பரமக்குடி:பரமக்குடி வைகை ஆற்றில் ஆங்காங்கே கழிவுநீர் குட்டை உருவாகி யுள்ளன. இவற்றில் தவறி விழும் முதியோர் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கின்றன.

பரமக்குடி நகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் வைகை ஆறு, கால்வாய் என நீர்நிலை களில் விடப்படுகிறது.ஆரம்பத்தில் காட்டுப் பரமக்குடியில் தேங்கிய கழிவுநீர் ஆற்றுப்பாலம், முத்தாலம்மன், பெருமாள் கோயில், கவுரி அம்மன் கோயில் படித்துறை எனகடந்து சென்றுள்ளது.

தற்போது தரைப்பாலம் அருகில் சவுராஷ்டிர இளநிலைப் பள்ளி எதிரில் வைகையில் மிகப் பெரிய அகழியாக உருவெடுத்துள்ளது. கடந்த வாரம் சென்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தார். இதேபோல் கடந்த ஆண்டு கவுரி அம்மன் கோயில் படித்துறை பகுதியில் ஒருவர் உயிரிழந்துஉள்ளார்.மேலும் ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் இது போன்ற பள்ளங்களில் மாணவர்கள் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.நகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை முறைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X