சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீன்துறை அலுவலகம் முற்றுகை: அனுமதியின்றி மீன்பிடிப்பு

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020
Share
Advertisement
 மீன்துறை அலுவலகம் முற்றுகை: அனுமதியின்றி மீன்பிடிப்பு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் 3 மீனவர்களை மீட்க கோரி மீன்துறை அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை யிட்டனர். மற்றொரு தரப்பு மீனவர்கள் அனுமதி இன்றி மீன்பிடிக்க சென்றனர்.

ஜூன் 13 ல் ராமேஸ்வரம் படகு கடலில் மூழ்கிய தில் மீனவர்கள் ரெஜின் பாஸ்கர், சுஜீந்தர், மலர் வண்ணன் மூவரும் நேற்றுமாலை வரை கரை திரும்பவில்லை.இவர் களை மீட்காததால் மீன் துறையை கண்டித்து ஜூன் 16ல் மீனவ உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.நேற்றும் மீட்பு பணியை துரிதப்படுத்தி, ராமேஸ்வரம் படகுகள் மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என கூறி மீன் துறை அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை யிட்டனர்.

மீன்பிடிக்க தயாராக இருந்த மீனவர்கள் அனுமதி டோக்கன் பெற முடியாமல் தவித்தனர். மீனவர்கள், மீனவ உறவினர் களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதும் தாசில்தார் அப்துல்ஜபார், டி.எஸ்.பி.,மகேஷ், போலீசார் சமரசம் செய்தனர். ஆத்திர மடைந்த மீனவர்கள் மீன்துறை அனுமதியின்றி பகல் 12:30 மணிக்கு பின் மீன்பிடிக்க சென்றனர். ராமேஸ்வரம் வந்த கலெக்டர் வீரராகவராவ், 'மண்டபம், சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல் படை கப்பல், ெஹலிகாப்டரில் வீரர்கள் தேடும் பணியில் ஈடு பட்டுள்ளனர் என தெரிவித்ததும், மீனவ உறவினர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X