அரசு மருத்துவமனைக்கு ரூ.1௦ லட்சத்தில் உபகரணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு ரூ.1௦ லட்சத்தில் உபகரணம்

Added : ஜூன் 18, 2020
Share
 அரசு மருத்துவமனைக்கு ரூ.1௦ லட்சத்தில் உபகரணம்

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்கு தினமும் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர்.இங்கு உள்நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, சித்தா பிரிவு இருந்த போதிலும் மருத்துவ உபகரணம் இல்லாத நிலை இருந்தது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.முதுகுளத்துார் அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்தவும், மருத்துவ உபகரணம் வழங்க முதுகுளத்துார் எம்.எல்.ஏ., பாண்டியனிடம் டாக்டர்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.2019-2020ல் எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியில் 10 லட்சம்ரூபாய் செலவில் வென்டிலேட்டர், ஈ.சி.ஜி., படுக்கைகள், சுத்தம் செய்யும் இயந்திரம், ஆக்சிஜன் இயந்திரம் உட்பட 100க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X