பொது செய்தி

தமிழ்நாடு

தேனி திட்டச்சாலை பணி தொடர பேச்சுவார்த்தை

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

தேனி:தேனி நகராட்சியில் முடங்கிய திட்டச் சாலையை முழுமைப்படுத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தேனியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்ட சாலைகள் உள்ளன. கம்பம் ரோட்டில் வரும் வாகனங்கள் நகருக்குள் வராமல் சுப்பன் தெரு, பென்னிகுவிக் நகர் வழியாக அரண்மனைபுதுார் விலக்கிற்கு செல்லலாம். இங்கு ஒரு கி.மீ. துாரத்திற்கு 40 முதல் 60 அடி அகல ரோடு அமைக்கப்பட்டது. ரோடு முடியும் இடத்தில் 220 மீ. நீளபாதைக்கு தனியார் நிலம் வழங்காததால் பணி தடைபட்டது.

பயன்பாட்டிற்கு வந்த திட்ட சாலையால் அப்பகுதி நிலமதிப்பு உயர்ந்து குடியிருப்புகள் அதிகம் உருவாகிறது.திட்டச் சாலையை முழுமைப்படுத்த மாவட்ட நிர்வாகம், நகராட்சியும் நில உரிமையாளர்களுடன் பேசியதில் உடன்பாடு ஏற்பட்டது. இதில் 165 மீ. நீளத்திற்கு நிலம் வழங்க சம்மதித்துள்ளனர். ஒருவர் உடன்படவில்லை. ஒப்புதல் வழங்கியது வரை திட்ட சாலை ரோடு அமைக்கும் பணி துவங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X