சத்திரக்குடியில் ஒருங்கிணைந்தகூட்டுப்பண்ணைத் திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சத்திரக்குடியில் ஒருங்கிணைந்தகூட்டுப்பண்ணைத் திட்டம்

Added : ஜூன் 18, 2020
Share

பரமக்குடி:சத்திரக்குடியில் ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணையத் திட்ட செயல்பாட்டை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பார்வையிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு, 1 கறவை மாடு, 10 ஆடுகள், 10 நாட்டுக்கோழிகள், 50 மரக்கன்றுகள், 2 தேனீ வளர்ப்புப் பெட்டிகள், தீவன பயிர் சாகுபடி இடுபொருட்கள், மண்புழு உரக்கூடம் மற்றும் பயிர்சாகுபடி செய்தல் ஆகியவற்றிற்கு ஒரு எக்டேருக்கு ரூ.60 ஆயிரம் வீதம் அரசு மானியம் வழங்குகிறது. இதன்படி சத்திரக்குடி முருகேசன் என்ற விவசாயி மூலம் அமைக்கப்பட்டு உள்ள கூட்டுப் பண்ணைய திட்டப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். போகலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 5 விவசாயிகளுக்கு பருத்தி பஞ்சு எடுக்கும் கருவிகள் வழங்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X