சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் அருகே இளைஞர் கொலை

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் மீனவர் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்த மீனவர் கண்ணன்40, இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் மண்டபம் விசைப்படகில் மீன்பிடிக்க செல்வதுடன், நண்பர்களுடன் பழகி வந்துள்ளார். நேற்று மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் சிலர் கண்ணனை கொலை செய்தனர். மண்டபம் போலீசார் விசாரித்தனர். நேற்று முன்தினம் இரவு கண்ணன், சிலருடன் சேர்ந்து ரயில்வே ஸ்டேஷன் அருகில் மது குடித்ததாகவும், அதில் வாக்குவாதம் ஏற்பட்டதில் கம்பு அல்லது இரும்பு கம்பியில் கண்ணன் தலை, உடம்பில் தாக்கி கொலை செய்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X