பொது செய்தி

தமிழ்நாடு

விடுபட்ட விவசாயிகளுக்குபயிர் காப்பீட்டு தொகை

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் வேளாண் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: 2016--17ல் பயிர் காப்பீடு செய்து விடுபட்ட விவசாயிகள், 2018--19 ஆண்டில் காரேந்தல், ராஜசூரியமடை, கூரியூர், சக்கரக்கோட்டை, நாரணமங்களம், அச்சுந்தன்வயல், வன்னிவயல் ஆகிய பகுதிகளில் பயிர் காப்பீடு செய்து விடுபட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை தற்போது வழங்கப்படுகிறது.

நெல் சாகுபடி செய்து காப்பீடு செய்து விடுபட்ட விவசாயிகளும் காப்பீடு செய்த ஆவணங்களுடன் தங்களது பெயரை சரிபார்த்துக் கொள்ளலாம். பயிர்காப்பீடு செய்து, அக்கிராமத்தில் வசிக்காத விவசாயிகள் பயிர்காப்பீட்டு ஒப்புகை சீட்டு, புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரம், கணினி சிட்டா, அடங்கல் நகல் விபரங்களுடன் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், தங்கள் பகுதி வேளாண் அலுவலரை தொடர்பு கொள்ளலாம், எனக் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X