சிசுவை கலைக்க மிரட்டும் கணவர் எஸ்.பி.,யிடம் கர்ப்பிணி புகார்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

தேனி:வயிற்றில் வளரும் சிசுவை கலைக்க கொலை மிரட்டல் விடுக்கும் கணவர், குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேனி சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி.,யிடம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி செல்லேஷ்வரி 22, புகார் அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் அம்பேத்கர் நகர் கிழக்குத்தெருவில் வசிக்கிறேன். அதே பகுதிசெல்வராஜ் 35 என்பவருடன் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்தது. குழந்தை இல்லாத நிலையில் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன்.

இந்நிலையில் கணவர், மாமனார் ராமர், மாமியார் அம்மாதாயி, சித்தப்பா முருகன் ஆகியோர் இணைந்து, வயிற்றில் வளரும் 'சிசு'வை கலைக்க வேண்டும் என நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே மிரட்டினர். அடித்துக் கொடுமைப்படுத்தினர். இதனால் கணவரை பிரிந்து தாய் வீட்டில் உள்ளேன். தற்போது அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்து வரதட்சணைக் கேட்டும், சிசுவை கலைக்க கொலைமிரட்டல் விடுத்தனர். ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X