ஊரணியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி:மரிக்குண்டு ஊராட்சி எம்.சுப்புலாபுரம் ஊரணியில் வளர்ந்து வரும் ஆகாய தாமரையை அப்புறப்படுத்த வேண்டும்.

இந்த ஊரணியில் மழைக்காலத்தில் தேங்கும் நீரால் இப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். மழையில் கிடைக்கும் நீர் சில மாதத்தில் வற்றி விடும். வெயில் காலத்தில் ஊரணி வறண்டு விடும்.

கடந்த சில ஆண்டாக ஊரணியில் கழிவுநீர் சேர்கிறது. இதனால் ஆகாய தாமரை அதிகம் வளர்ந்து விடுகிறது. மழைநீர் தேங்கினாலும் அதனை கால்நடைகளுக்கு பயன்படுத்த முடியாமல் கெட்டு விடுகிறது. ஊராட்சி பணியாளர்கள் தெரிவித்ததாவது:ஊரணி வறண்டுள்ளபோது ஆகாயதாமரையை முற்றிலும் அகற்றி விட்டால் மீண்டும் வளராது. ஆனால் கழிவுநீர் தேங்குவதால் எப்போதும் உள்ள ஈரப்பதத்தில் அபரிதமாக வளர்ந்து விடுகிறது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X