மூடப்பட்ட ரயில்வே கேட்டால் அவதி

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement
 மூடப்பட்ட ரயில்வே கேட்டால்  அவதி

ஆயக்குடி:பழநி ஆயக்குடி அருகே உள்ள ரயில்வே கேட் நாள் முழுவதும் மூடப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

பழநி ஆயக்குடி அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ரயில்வே கிராஸிங்கில் பராமரிப்புக்காக நேற்று காலை முதல் மாலை வரை ரயில்வே கேட் மூடப்பட்டது. இது குறித்து முன்னரே முறையான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களுக்கு மாற்றுப்பாதை குறித்த அறிவிப்புகளும் வைக்கப்படவில்லை.

ரயில்வே கேட்டில் பணி நடந்த இடத்தில் மட்டும் அறிவிப்பு வைக்கப்பட்டது. இதனால் பழநியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் கேட் வரை சென்றன.பின்னரே மாற்றுப்பாதையான டி.கே. புதுார் செல்லும் பாதைக்கு 1 கி.மீ., வரை திரும்பி வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவ்வழியே பயணித்த வாகனங்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X