பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் சாலையோர கடைகள் இடமாற்றம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement
 பழநியில் சாலையோர கடைகள் இடமாற்றம்

பழநி:பழநியில் சாலையோர 'பர்மா பெட்டி' கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
பழநியை திருப்பதியை போல் மாற்றுவதற்காக முதல்வர் பழனிச்சாமி ரூ.58 கோடிக்கு நிதி ஒதுக்கி, சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.இதனால் ஆர்.எப்., ரோட்டில் நகராட்சி அனுமதியோடு வியாபாரத்திற்காக வைக்கப்பட்டுள்ள 13 பர்மா பெட்டி கடைகளை இடமாற்றம் செய்துள்ளனர். மேலும் ஒரு பெட்டி பழநி பஸ்ஸ்டாண்ட் அருகே வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையர் லட்சுமணன் கூறியதாவது:சாலைப்பணிகள் நடப்பதால் தற்காலிகமாக திருவள்ளுவர் சாலைக்கும், திருவள்ளுவர் குறுக்குச் சாலைக்கும் பெட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. பஸ்ஸ்டாண்ட் பகுதி பெட்டி அகற்றப்படும். சாலையோர வியாபாரிகள் ஆலோசனைக்கு பின் நிரந்தர இடம் கண்டறியப்படும். தற்போது வைக்கப்படும் இடங்களில் ஆட்சேபனை இல்லை எனில் அப்பகுதியில் கடைகள் தொடர்ந்து செயல்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X