தமிழ்நாடு

எப்போது நத்தம் 4 வழிச்சாலை நிறைவடைவது : திண்டுக்கல் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement
 எப்போது நத்தம் 4 வழிச்சாலை நிறைவடைவது : திண்டுக்கல் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

நத்தம்: நத்தம் மதுரை நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் விரைவில் நிறைவடையுமா என இப்பகுதியினர் எதிர்பார்த்துள்ளனர்.


கடந்த நவம்பர் 2018 முதல் இந்தப் பணிகள் துவங்கி நடக்கிறது. இத்திட்டத்தின் கட்டுமானப் பணிக்காக ரூ.890 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரை அய்யர் பங்களாவில் இருந்து நத்தம் - -திண்டுக்கல் ரோடு சேர்வீடு பிரிவு வரை 29 கி.மீ., தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப் பட்டு வருகிறது.

சென்டர் மீடியன் உட்பட 33 மீ., அகலத்தில் இச்சாலை அமைகிறது. மதுரை ஐயர் பங்களாவில் இருந்து ஊமச்சிக்குளம் வரை 7 கி.மீ., தூரத்திற்கு மேம்பாலம் அமைக்க தூண்கள் எழுப்பப்பட்டு உள்ளன. பரளிப்புதூர் அருகே பார்க்கிங் மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய சுங்கச்சாவடி அமைகிறது.வரும் டிசம்பர் இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் நத்தம் - ஊமச்சிகுளம் வரை இடைவெளி விட்டு பல இடங்களில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பாலம் கட்டும் பணி நிறைவடையாமல் உள்ளது.

நத்தம் மூங்கில்பட்டி பிரிவில் இருந்து சேர்வீடு வரை 2 கி.மீ., தூரத்திற்கு அமைய உள்ள பைபாஸ் பணிகளும் நிறைவடையாமல் உள்ளது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கொரோனா ஊரடங்கால் பணிகள் தடைப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வையடுத்து தற்போது மீண்டும் பணிகள் நடக்கிறது. திட்டமிட்ட காலத்தை தாண்டாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என திண்டுக்கல் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X