தேர்வு விடைத்தாள்களைஒப்படைக்க உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்வு விடைத்தாள்களைஒப்படைக்க உத்தரவு

Added : ஜூன் 18, 2020
Share

திண்டுக்கல்:கொரோனா முன்னெச்சரிக்கையாக, பத்து மற்றும் பிளஸ் 1 ல் விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில் 80 சதவீதம், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீதம் மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பள்ளிகளில் இருந்து 2019-20 க்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களின் வருகைப்பதிவு பெறப்பட்டது.

இந்நிலையில் மதிப்பெண்களை மதிப்பீடு செய்யும் வகையில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாள், செய்முறை பயிற்சி விவரங்கள் உள்ளிட்டவைகளை மூன்று நாட்களுக்குள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் இப்பணிகளுக்காக மாணவர்கள் அல்லது அவர்களது பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைக்க கூடாது. விடைத்தாள் சேகரிப்பு பணிக்கு மாணவர்களை பயன்படுத்த கூடாது என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X