தீ பற்றி எரிந்து வேன் சேதம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீ பற்றி எரிந்து வேன் சேதம்

Added : ஜூன் 18, 2020
Share

திருமங்கலம், -மதுரை கோச்சடை தனியார் டயர் மறு சீரமைக்கும் நிறுவனத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு டயர்கள் ஏற்றிக் கொண்டு மினி வேன் திருமங்கலம் நான்குவழிச்சாலை செங்குளம் பிரிவு அருகே சென்றது.திடீரென இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. டிரைவர் மனோகரன் வேனை ரோட்டோரமாக நிறுத்தி, உடன் வந்தவர்கள் துணையுடன் டயர்களை வாகனத்தில் இருந்து இறக்கினார். முன்பகுதியில் தீப்பற்றியது. தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையில் வீரர்கள் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். முன்பகுதி முற்றிலும் சேதமுற்றது. நெடுஞ்சாலை ரோந்து எஸ்.ஐ., வெங்கடேஸ்வரன் மற்றும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X