பொது செய்தி

இந்தியா

ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம்: தெலுங்கானாவில் அவசர சட்டம்

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
salary deduction, telangana, emergency law, pay cuts
, ஊதியம் பிடித்தம், தெலுங்கானா, அவசர சட்டம்

ஐதராபாத்: கொரோனா வைரஸ் பாதிப்பால், சம்பள குறைப்பு உள்ளிட்ட நிதி நடவடிக்கைகளுக்காக, தெலுங்கானாவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில், முதல்வர், சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, கொரோனா ஊரடங்கால், மாநில நிதி நிலைமை பாதிக்கப்பட்டதையடுத்து, அரசு பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில், குறிப்பிட்ட அளவில் பிடித்தம் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது.இது தொடர்பாக இயற்றப்பட்ட, 'தெலுங்கானா பேரழிவு மற்றும் அவசர பொது சுகாதார நிலை, 2020' சிறப்பு சட்டத்திற்கு, மாநில கவர்னர், தமிழிசை சவுந்தரராஜன், நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.


latest tamil news


இதையடுத்து, இச்சட்டம் மார்ச், 24 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவி வரும் இக்கால கட்டத்தில், நிதி வருவாய் குறைந்துள்ளதால், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தரப்படும் ஊதியம் உள்ளிட்ட நிதி செலவினங்களை, குறைக்கவோ, தாமதிக்கவோ அரசுக்கு அதிகாரம் உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஜூன்-202022:30:09 IST Report Abuse
Bhaskaran முதலில் தமிழ்நாட்டில் இத்திட்டம் அமல் செய்யுங்கள் .ஐம்பதினாயிரம் மாதசம்பளத்துக்குமேல் உள்ளவர்களுக்கு 20 விழுகாதுகுறைக்கணும் முப்பதாயிரம் ஓய்வூதியம் உள்ளவர்களுக்கு பத்து விழுக்காடு குறைக்கலாம் .மேலும் மூணுமாசமாக வேலையில்லாமல் ஊதியம் வாங்கும் துறைகளில் இன்னும் அதிகமாகவேபிடிக்கலாம்
Rate this:
Cancel
krishnaraj - bangalore,இந்தியா
18-ஜூன்-202016:17:02 IST Report Abuse
krishnaraj Instead, Rulers MUST ABOLISH All WASTEFUL & EXTRAVAGANT EXPENDITURES Incl. FREEBY-BRIBERIES (Only 10% are Poordebilitated-aged etc Others are Earning & with Money),
Rate this:
Cancel
Ramanathan Muthiah - Madras,இந்தியா
18-ஜூன்-202016:09:44 IST Report Abuse
Ramanathan Muthiah இதே போர்முலாவை தமிழ்நாட்டில் முதலில் அமுல்படுத்தி இருக்கனும். இன்னும் எதுவும் கெட்டுப்போகவில்லை. முதலில் நம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி கல்வி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகம் ஊழியர்கள் & வாத்தியர்களை வேலையில் இருந்து தூக்கணும். எல்லாம் திருட்டு தி மு க வின் பினாமிகள். ஜக்கடோ ,ஜியோ வேலையே செய்யாமல் ஜனவரி 2020 முதல் ஜூன் வரை முழு சம்பளம் வாங்குகிறார்கள். இதனால் பொது மக்களுக்கு என்ன பயன் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X