சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருட முயற்சி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருட முயற்சி

Added : ஜூன் 18, 2020
Share

செஞ்சி, : செஞ்சி அடுத்த சிங்கரவம் ரங்கநாதர் கோவில் ஜன்னலை உடைத்து திருட முயன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சிங்கவரம் கிராமத்தில் மலை மீது பழமையான ரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு விலை மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் உள்ளன. நேற்று முன்தினம், இரவு 9:30 மணியளவில் சிங்கவரம் கிராமத்தில் மழை பெய்தது.அப்போது இரவுக் காவலர்கள் ரமேஷ், தேவேந்திரன் இருவரும் மலையின் கீழ் உள்ள மண்டபதில் இருந்தனர். மலை மீது சத்தம் வருவதைக் கேட்டு மலை மீது சென்றனர். அப்போது மர்ம நபர்கள் தப்பியோடினர்.காவலர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலுக்குள் செல்லும் பிரதான வாயிலின் முதல் இரும்பு கேட் உடைக்கப்பட்டிருந்தது.

அடுத்துள்ள இரும்பு கதவை உடைக்க முயற்சி செய்து முடியாததால், கோவிலின் கிழக்கு பக்கம் கொடிமரம் எதிரே உள்ள சிமென்ட் ஜன்னலை உடைத்துள்ளனர்.அடுத்து இரும்பு ஜன்னலை உடைப்பதற்கு முன்பாக காவலாளிகள் சென்றதால் தப்பியோடியது தெரிய வந்தது. இதுகுறித்து கோவிலை நிர்வகித்து வரும் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு கொடுத்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து கோவிலில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X