இந்தியா

இ பாஸ் இல்லாமல் வருவோர் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

காரைக்கால் : காரைக்காலில் சட்டவிரோதமாக இ பாஸ் இல்லாமல் வரும் நபர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் அர்ஜூன் சர்மா விடுத்துள்ள செய்திக் குறிப்பு:காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக வெளி மாநிலங்கள், வெளி நாட்டிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்தலில் கண்காணிக்கப்படுகிறார்கள்.மேலும், சிலர் இ பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் நுழைகின்றனர். சட்ட விரோதமாக வருபவர்கள் குறித்த விவரங்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் (0436-228801- 227704 மற்றும் 94887 70024 என்ற எண்களில் பொது மக்கள் தெரிவிக்கலாம்.

மேலும் கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X