இந்தியா

மாற்று வழித்தடத்தில் எரிவாயு திட்டத்தை செயல்படுத்த கடிதம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

புதுச்சேரி : ஊசுட்டேரி சரணாலயத்தின் சமநிலை சீர்கெடும் என்பதால் மாற்று வழித் தடத்தில் எரிவாயு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு புதுச்சேரி பா.ஜ., சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இயற்கைச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு பா.ஜ.,மாநில தலைவர் சாமிநாதன் எழுதிய கடிதம்:புதுச்சேரியில் 10 லட்சம் மக்களுக்கு ஒற்றை நீர் ஆதாரமாக உள்ள ஊசுட்டேரி, வெளிநாட்டுப் பறவைகள் சரணாலயமாகவும் விளங்குகிறது. இந்த சரணாலயம் அருகே 10 கி.மீ., துாரத்தைக் கடக்க இந்தியன் ஆயில் நிறுவனம் தேசிய வனவுயிர் வாரிய அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. ஊசுட்டேரி பகுதியில் எரிவாயு குழாய் அமைப்பதால் ஏரியின் இயல்பு நிலை பாதிக்கும். சரணாலயத்தின் சூழல் சமநிலையே சீர்கெடும் என இந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரி மக்கள் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த திட்டம் ஏரியின் வழியாகச் செல்வதையே எதிர்க்கின்றனர். மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்கும் மத்திய அரசு, இந்த திட்டத்தையும் மாற்று வழித்தடத்தில் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X