செஞ்சி போக்குவரத்து பணிமனையில் ஊழியர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செஞ்சி போக்குவரத்து பணிமனையில் ஊழியர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை

Added : ஜூன் 18, 2020
Share

செஞ்சி : செஞ்சி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் செஞ்சி அரசு பணிமனையில் ஊழியர்கள், டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். பணிமனை மேலாளர் கோதண்டம் மருத்துவ பரிசோதனையை துவக்கி வைத்தார்.டாக்டர்கள் பாக்கியலட்சுமி, மகாலட்சுமி, வட்டார மேற்பார்வையாளர் எட்வர்ட் ராஜன், சுகாதார ஆய்வாளர் ஏழுமலை, போக்குவரத்து மேற்பார்வையாளர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X