அரசியல் செய்தி

தமிழ்நாடு

மணல் குவாரிக்கு எதிர்ப்பு: கறுப்புக்கொடி போராட்டம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே அரசு மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கறுப்புக் கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பாளையம் மற்றும் அண்டராயநல்லுார் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல்குவாரி அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு, கடந்த 3ம் தேதி ஆற்றில் பார்வையிட்டனர்.இதனையறித்த அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், குவாரி அமைக்கக் கூடாது என அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.இதனையெடுத்த கடந்த 9ம் தேதி ஜே.சி.பி., இயத்திரம் மூலம் ஆற்றில் பாதை அமைக்கும் பணி துவங்கியது.

இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.இந்நிலையில் நேற்று மதியம் ஆற்றில் டாராஸ் லாரியில் மணல் எடுக்கப்பட்டது.இதனையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் பா.ம.க., - அ.ம.மு.க., - இந்திய கம்யூ., கட்சியினர் பெண்ணை ஆற்றில் முற்றுகையிட்டு கறுப்புக் கொடியேந்தி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த திருவெண்ணெய்நல்லுார் தாசில்தார் வேல்முருகன், இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X