இந்தியா

தடை உத்தரவை மீறியதாக தொழிற்சங்கத்தினர் மீது வழக்கு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

புதுச்சேரி : தடையுத்தரவை மீறி போராட்டம் நடத்திய தொழிற் சங்கத்தினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க கோரி ஏ.ஐ.டி.யு.சி., பாப்ஸ்கோ ஊழியர்கள் நலச் சங்கம் சார்பில் மாநில நிர்வாகிகள் அபிஷேகம், சேது செல்வம் தலைமையில் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.கொரோனா ஊடரங்கிற்காக, அமலில் இருந்த 144 தடை உத்தரவை மீறியதாக, அவர்கள் மீது பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்கு பதிவு செய்துள்ளார்.இதேபோல், ராஜா தியேட்டர் சிக்னல் அருகே நேற்று முன் தினம் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய மா.கம்யூ., பிரதேச செயலாளர் ராஜாங்கம் மற்றும் 19 பேர் மீது சப் இன்ஸ்பெக்டர் புனிதராஜ் அளித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் வழக்கு பதிந்தனர்.

மேலும் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய, சரவணன், வீராசாமி, ராமமூர்த்தி உள்ளிட்ட பொதுப்பணித் துறை தொழில்நுட்ப ஊழியர்கள் மீதுபெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X