சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குப்பை கொட்டிய தகராறு ; இருதரப்பில் 3 பேர் கைது

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

விழுப்புரம், : குப்பை கொட்டிய தகராறில் தாக்கிக்கொண்ட இருதரப்பைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் மனைவி கலைச்செல்வி, 42; இவரது வீட்டுமனையில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், 52; அவரது மனைவி சித்ரா, 38; ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி கலைச்செல்வி மாமியார் கிருஷ்ணவேணி அங்கு குப்பை கொட்டச் சென்றுள்ளார். அப்போது, செல்வம், சித்ரா ஆகியோர், அவரை ஆபாசமாக திட்டி கீழே தள்ளினர். இதனால், ஏற்பட்ட தகராறில் செல்வம், சித்ரா மற்றும் கலைச்செல்வி ஆகியோர் ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டினர்.

இது குறித்து புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப்பதிந்து, செல்வம், சித்ரா, கலைச்செல்வியை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X