சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதை நெல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

செஞ்சி : செஞ்சி பகுதியில் விதைநெல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாக்களில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா பருவத்தில் 30 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு பொன்னி நடவு செய்கின்றனர். நவரை பருவத்தில் குறுகிய கால ரகங்களை பயிர் செய்கின்றனர்.விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் நெல்லில் இருந்தே அடுத்த விதைப்புக்கு விதைளை பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து 3 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தினால் நெல்லின் தரமும், மகசூலும் குறையும்.இதனால், அரசு விரிவாக்க மையங்களிலும், தனியார் விதைப் பண்ணைகளிலும் விதைகளை வாங்குகின்றனர்.

இந்த பருவத்திற்கு செஞ்சி பகுதி விவசாயிகள் கடைகளில் வங்கிய விதை நெல்லின் தரம் குறைந்து, முளைப்பு திறன் குறைவாக இருந்தது.இது குறித்து விவசாயிகள் புகார் செய்ததையடுத்து விழுப்புரத்தில் இருந்து விதைச் சான்று அலுவலர்கள் செஞ்சியில் ஆய்வு நடத்தினர். புகார் கூறப்பட்ட கடைகளில் இருந்த நெல் விதைகளை விற்பனை செய்ய தடை விதித்தனர். இதனால், விதைத்த விவசாயிகளின் உழைப்பும், இதற்கான செலவும் வீணானது. செஞ்சி, மேல்மலையனுார் பகுதியில் உள்ள விரிவாக்க மையங்கள் மூலம் ஆண்டுக்கு 180 டன் அளவிற்கு விவசாயிகள் விதைகளை வாங்குகின்றனர்.

விரிவாக்க மையங்களில் விவசாயிகள் கேட்கும் ரகம் எப்போதும் கிடைப்பதில்லை. அரசு அறிமுகம் செய்யும் புதிய ரக நெல் விதைகளே அதிகம் இருப்பு வைக்கின்றனர்.இதனால், விவசாயிகள் உரக்கடைகளிலும், நெல் மண்டிகளிலும் தங்களுக்குத் தேவையான ரக விதை நெல்லை வாங்குகின்றனர். விதை நெல்லுக்குத் தேவையான விதைகளை முன்னோடி விவசாயிகளிடம் வேளாண்மைத் துறையினர் வாங்குகின்றனர். வேளாண்மைத் துறையினர் தேர்வு செய்யும் நிலத்தில் அறுவடை செய்யப்படும் நெல் விதைகளை, காகுப்பம், இருவேல்பட்டு, கள்ளக்குறிச்சி விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் கொண்டு சென்று திரும்பக் கொண்டு வருகின்றனர்.

இந்த விதைகளையே வேளாண்மைத் துறையினர் விவசாயிகளிடம் வாங்கி வேளாண்மை விரிவாக்க மையங்களில் விற்பனை செய்கின்றனர். செஞ்சி பகுதியில் 2 தனியார் நெல் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளனர். இதில் டன் ஒன்றுக்கு 600 ரூபாய் வரை கொடுத்து சுத்திகரிப்பு செய்கின்றனர்.இதன் பிறகு அரசு விதைச் சான்று அலுவலரிடமும், வேளாண்மைத் துறையினரிடமும் விவசாயிகள் சான்று பெற வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு காலதாமதம், வீண் அலைச்சல், கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதனால் செஞ்சி பகுதி விவசாயிகள் விதை பண்ணை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

செஞ்சி பகுதிக்குத் தேவையான நெல் விதைகளை வேளாண்மைத் துறையினர் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்குகின்றனர். இதன் காரணமாக தேவையான நேரத்தில் தேவையான ரகமும், தேவையான அளவிற்கும் நெல் விதைகள் கிடைப்பதில்லை.எனவே விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகளின் வசதிக்காக செஞ்சி அல்லது மேல்மலையனுாரில் அரசு சார்பில் விதைப் பண்ணை அமைக்க வேளாண்மைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X