சீன பொருட்கள் எரிக்கும் போராட்டம் | Dinamalar

இந்தியா

சீன பொருட்கள் எரிக்கும் போராட்டம்

Added : ஜூன் 18, 2020
Share

புதுச்சேரி : புதுச்சேரி பரதீய மஸ்துார் சங்கம் சார்பில் சீனா அத்துமீறலை கண்டித்து, சீன பொருட்களை எரிக்கும் போராட்டம் நேரு வீதியில் நேற்று நடந்தது.

போராட்டத்திற்கு, மஸ்துார் சங்க ஒருங்கிணைப்பாளர் சந்துரு தலைமை தாங்கினார். இதில், சங்க மாநில தலைவர் திருமுருகன், முன்னாள் மாநில செயலாளர் சிவஞானம், கட்டிட தொழிலாளர்கள் சங்க ஒருங்கிணைப் பாளர் முருகன், பரதீய மஸ்துார் சங்க மாநில பொருளாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.போராட்டத்தில், இந்தியா- சீனா எல்லைப்பகுதியில் சீனா அத்துமீறி, இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து, சீன பொருட்களை நேரு வீதி சாலையின் நடுவே போட்டு எரித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X