மாநிலத்தில் கொரோனா பணிகள் | Dinamalar

இந்தியா

மாநிலத்தில் கொரோனா பணிகள்

Added : ஜூன் 18, 2020
Share

புதுச்சேரி : எதிர்காலத்தில் கொரோனா தொற்று அதிகரித்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

புதுச்சேரி சுகாதார துறையின் சுகாதார இயக்ககத்தின்ஆலோசனை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில்நடந்தது. முதல்வர் நாராயண சாமி தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணராவ், கந்தசாமி உள்பட பல்வேறு துறை அதிகரிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், புதுச்சேரியில்கொரோனா எதிர்காலத்தில் எப்படி பரவும். அதனை கட்டுப்படுத்தும்வழிமுறைகள்குறித்து விவாதித்தனர். கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.எதிர்காலத்தில் தொற்று அதிகமானால் மருத்துவ உபகரணங்கள் வாங்குவது, மருத்துவ மனைகளை தயார் நிலையில் வைத்திருப்பது, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X