இந்தியா

வேதபுரி ஆதி சைவ சிவாச்சாரியார்கள் முதல்வருக்கு நன்றி

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

புதுச்சேரி : சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்களுக்கு ஆதரவாக பேசிய முதல்வருக்கு புதுச்சேரி வேதபுரி ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி வேதபுரி ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் தலைவர் கணேஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் முதல்வர் நாராயணசாமியை நேற்று சந்தித்து பேசினர். இதில், அர்ச்சகர்களின் காணிக்கையை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் ஆகியோருக்கு ஆதரவாக பேசியதற்காக நன்றி தெரிவித்தனர்.பின்னர் முதல்வர் நாராயணசாமியிடம் அளித்த மனு :கோவில்களில் பணிபுரியும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் பூசாரிகளுக்கு குறைந்த ஊதியத்துடன், பக்தர்களின் காணிக்கையை வைத்தே வாழ்வாதாரம் உள்ளது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தும், சில தளர்வுகள் அறிவித்து, வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.ஆனால், அர்ச்சகர்களுக்கு காணிக்கை வழங்க கூடாது.அர்ச்சகர்கள் தீபாராதனைத் தட்டு வைக்க கூடாது என நிர்வாக அலுவலர்கள் கூறி வருகின்றனர். எழுத்துப் பூர்வமாக உத்தரவு வந்தால் மட்டுமே நாங்கள் அனுமதிக்க முடியும் என கூறுகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு, துறை செயலருடன் பேசி, உடன் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்தார்.

இதில், சங்க துணைத் தலைவர் திருஞானசம்பந்தம், செயலாளர் பாபு, பொருளாளர் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் ரத்தின சபாபதி, சட்ட ஆலோசகர் கார்த்திக், கொள்கை பரப்பு செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X