இந்தியா

குடி பழக்கத்தால் தகராறு கணவன் துாக்கிட்டு தற்கொலை

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

திருக்கனுார் : குடி போதையில் கணவர் வீட்டிற்கு வந்ததால் ஏற்பட்ட தகராறில், மனைவி விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால், மனமுடைந்த கணவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி, திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கனகராஜ், 38; ஆட்டோ டிரைவர். இவருக்கு, சபிதா, 33 என்ற மனைவியும், கவியரசி, கஜன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை கனகராஜ் வேலைக்கு செல்லாமல், குடி போதையில் வீட்டிற்கு வந்தார்.இதனால், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சபிதா, எலி பேஸ்ட் சாப்பிட்டு, மயங்கி விழுந்தார் .

இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு, மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.பின்னர், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இதற்கிடையே, தன்னால் தான் மனைவி தற்கொலைக்கு முயன்றதாக எண்ணிய கணவர் கனகராஜ், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார், கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X