இந்தியா

வண்ணான்குளத்தில் மரக்கன்று நடும் விழா

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

புதுச்சேரி : உலக பாலைவன வளர்ச்சி தினத்தையொட்டி இந்திரா நகர் தொகுதி, கோவிந்தன்பேட் வண்ணான்குளத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

பெத்திசெமினார் மேல் நிலைப் பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் மரங்களை நடும் பணியை துவக்கி வைத்தார். வண்ணான் குளக்கரை முழுவதும் பல்வேறு வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. குளத்தின் உயிர்பன்மய சூழல் குறித்து அருகில் உள்ள வீடுகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியில், வனத் துறை வன காப்பாளர் சத்தியமூர்த்தி, குளங்கள் பாதுகாப்போம் இயக்க நிர்வாகி புரபையர், உறுப்பினர் அருண், அய்யனார், அருள்குமார், சிவகுமார், ஜீவானந்தம், ரமேஷ், உழவர்கரை நகராட்சி செயற் பொறியாளர் குணசேகரன், உதவி பொறியாளர் ராமநாதன், இளநிலை பொறியாளர்கள் முத்தையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X