தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டம் வாபஸ்| Dinamalar

இந்தியா

தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

Added : ஜூன் 18, 2020
Share

புதுச்சேரி : பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் தொழில் நுட்ப ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

எம்.டி.எஸ்., ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மெக்கானிக், சீனியர் மெக்கானிக், போர்மேன், ஒர்க் இன்ஸ்பெக்டர், ஓவர்சியர் பதவிகளை 5:3:2 விகிதாச்சாரப்படி உருவாக்கி அமல்படுத்த வேண்டும், காலியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர் வீராசாமி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். சங்க ஆலோசகர்கள் அப்துல் அஜிஸ், தேவராஜ், ஏகாம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சங்க நிர்வாகிகளை அழைத்து, தலைமைப் பொறியாளர் மகாலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசு ஊழியர் சம்மேளனத்தின் கவுரவ தலைவர் பாலமோகனன், தலைவர் பிரேமதாசன், இணைச் செயலாளர்கள் ஞானசேகர், இளங்கோவன், சம்மேளன பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத் தலைவர் சரவணன் கூறுகையில், 'எங்களது முக்கிய கோரிக்கையான பணிகளை மறு கட்டமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக பேச்சு வார்த்தையில் உறுதி அளிக்கப்பட்டது.

காலி பணியிடங்களை நிரப்பவும், விடுமுறை நாட்களில் வேலை செய்தால் சிறப்பு ஊதியம் தரவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டோம்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X