இந்தியா

உஷார்! புதுச்சேரியில் ஒரே நாளில் 30 பேருக்கு தொற்று....மருத்துவமனைகளில் 131 பேருக்கு சிகிச்சை

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement
உஷார்! புதுச்சேரியில் ஒரே நாளில் 30 பேருக்கு தொற்று....மருத்துவமனைகளில் 131 பேருக்கு சிகிச்சை

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில், புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் 28 பேர்; காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்கள் 2 பேர். புதுச்சேரியில் ஒரே நாளில் அதிகமாக கொரோனாவால் பாதிப்பது இதுவே முதல் முறையாகும்.இதையடுத்து, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. இதில், கதிர்காமத்தில் உள்ள கோவிட் மருத்துவமனையில் 100 பேரும், ஜிப்மரில் 20 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 5 பேரும், மாகி அரசு பொது மருத்துவமனையில் 4 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

புதுச்சேரியை சேர்ந்த 2 பேர் டில்லியிலும், மகாராஷ்டிராவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.டாக்டர்கள்பாதிப்பு பாதிக்கப்பட்டுள்ள 28 பேரில் 7 பேர் முக கவசம் தயாரிக்கும் கம்பெனியை சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து முக கவசம் தயாரிக்கும் கம்பெனியில் மட்டும் மொத்தம் 18 பேருக்கு தொற்று பரவி உள்ளது. ஜிப்மரை சேர்ந்த 6 டாக்டர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு, ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடம் தொற்று பரவி உள்ளது.

புதிதாக பலருக்கும் தொற்று ஏற்பட்டதால் லாஸ்பேட்டை, முருங்கப்பாக்கம், மோகன் நகர், கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, செல்லிப்பட்டு, கரியமாணிக்கம், கைக்கிலப்பட்டு, தட்டாஞ்சாவடி, முத்தியால்பேட்டை, வாழைக்குளம் ஆகிய 11 இடங்களில் உள்ள சில தெருக்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.கோவிட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 பேரும், ஜிப்மரில் சிகிச்சை பெற்ற 8 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஜிப்மரில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள 8 பேரில் 7 பேர் ஜிப்மர் டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. 80 வயது முதியவர் பலிவி.வி.பி., நகரை சேர்ந்த 80 வயது முதியவர் கொரோனா தொற்றுக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிறுநீரக கோளாறாலும் பாதிக்கப்பட்டு இருந்தார். ஓய்வு பெற்ற ஊழியரான இவர் நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, புதுச்சேரியில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதில், 4 பேர் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்.புதுச்சேரியின் கொரோனா பாதிப்பு பட்டியல் 245 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X