வரதட்சனை கொடுமை மூவர் மீது டாக்டர் புகார்| Dinamalar

இந்தியா

வரதட்சனை கொடுமை மூவர் மீது டாக்டர் புகார்

Added : ஜூன் 18, 2020
Share

வில்லியனுார் : வில்லியனுாரில் பெண் டாக்டரிடம் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்திய கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

வில்லியனுார் அண்ணா நகர் 2வது குறுக்குத் தெருவை சேர்ந்த குமரேசன் மகள், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். இவருக்கும் வில்லியனுார் சிவகணபதி நகர் குறிஞ்சி வீதியைசேர்ந்த ராமலிங்கம் மகன் டாக்டர் பிரேம்ராஜ், 39; என்பவருக்கும் கடந்த 2018 டிச., 12ம் தேதி திருமணம் நடந்தது.பிரேமராஜா அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் பணி புரிகிறார். திருமணத்திற்கு பிறகு வில்லியனுார் அன்னை நகரில் வாடகை வீட்டில் வசித்த பெண் டாக்டர் கடந்த ஏப்., மாதம் கர்ப்பமானார்.

இந்நிலையில் பெண் டாக்டர், கதிர்காமம் மருத்துவ மனையில் கொரோனா வார்டில் பணி நியமிக்கப்பட்டார். கர்ப்பமான நேரத்தில் கொரோனா வார்டில் பணிக்கு செல்ல வேண்டாம் என கணவர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரச்னை ஏற்பட்டு, பெண் டாக்டர் தாயார் வீட்டிற்கு சென்று, அங்கிருந்தே வேலைக்கு சென்று வந்தார். சில தினங்களுக்கு முன் , அன்னை நகர் வீட்டிற்கு சென்ற பெண் டாக்டர் வீடு பூட்டியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து வில்லியனுார் மகளிர் போலீசில் பெண் டாக்டர் புகார் தெரிவித்தார்.

அதில், கணவர் பிரேம்ராஜா, மாமனார் ராமலிங்கம், மாமியார் பிரேமா ஆகியோர் கூடுதலாக வரதட்சனை கேட்டு தாக்கினர். இந்ததாக்குதலால் எனது கர்ப்பம் கலைந்து போனது. திருமணத்தின் போது வழங்கிய நகை, கார், உள்ளிட்ட சீர் வரிசையுடன் கணவர் குடும்பத்தினர் தலைமறைவானதாக கூறியுள்ளார். புகாரின் பேரில் டாக்டர் பிரேம்ராஜா, அவரது தந்தை ராமலிங்கம், தாயார் பிரேமா ஆகிய மூவர் மீது வில்லியனுார் மகளிர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சியாமாளா வழக்கு பதிந்து தேடி வருகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X