பொது செய்தி

தமிழ்நாடு

1,000 சீன வீரர்கள் தாக்கினர்: வீர மரணம் அடைந்த பழனியின் சகோதரர்

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
திருவாடானை: ''இரவில் இந்திய வீரர்கள் ஓய்வில் இருந்த போது, 1,000 சீன வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்,'' என, ராணுவ வீரர் இதயக்கனி தெரிவித்தார்.லடாக் கல்வான் எல்லையில், சீன ராணுவத்தின் திடீர் தாக்குதலில், ராமநாதபுரம் மாவட்டம், கடுக்கலுார் ராணுவ வீரர் பழனி, 40, உட்பட, 20 பேர் வீர மரணம் அடைந்தனர். நேற்று கடுக்கலுார் கிராம மக்கள், சோகத்துடன் காணப்பட்டனர்.பழனி சகோதரர்
India, China, LOC, havildar K Palani, india china border, Indian Army soldier K Palani, LAC standoff, இந்தியா, சீனா, லடாக், மோதல்

திருவாடானை: ''இரவில் இந்திய வீரர்கள் ஓய்வில் இருந்த போது, 1,000 சீன வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்,'' என, ராணுவ வீரர் இதயக்கனி தெரிவித்தார்.

லடாக் கல்வான் எல்லையில், சீன ராணுவத்தின் திடீர் தாக்குதலில், ராமநாதபுரம் மாவட்டம், கடுக்கலுார் ராணுவ வீரர் பழனி, 40, உட்பட, 20 பேர் வீர மரணம் அடைந்தனர். நேற்று கடுக்கலுார் கிராம மக்கள், சோகத்துடன் காணப்பட்டனர்.பழனி சகோதரர் இதயக்கனி, 34, ராஜஸ்தான் மாநிலத்தில், ராணுவத்தில் பணியாற்றுகிறார். அவர் நேற்று காலை, 9:00 மணிக்கு கடுக்கலுார் வந்தார்.

இதயக்கனி கூறியதாவது: நான், 2011ல் வேலைக்கு சேர்ந்தேன். அண்ணனுடன் அடிக்கடி அலைபேசியில் பேசுவேன். ஒரு மாதமாக தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் மரணம் குறித்து, மற்ற வீரர்களிடம் விசாரித்தேன். அவர்கள், 'ஜூன், 15 இரவு, 9:30 மணிக்கு, 150 இந்திய வீரர்கள் ஓய்வில் இருந்தனர். அப்போது, 1,000 சீன வீரர்கள் திடீரென கற்களாலும், கம்பியாலும் தாக்கினர். இந்திய வீரர்களும் திருப்பி தாக்கினர். ஆறு இந்திய வீரர்கள், அருகிலிருந்த நதியில் விழுந்ததால், அவர்களின் நிலைமை தெரியவில்லை' என்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news


பழனியின் குடும்பத்தினருக்கு, கலெக்டர் வீரராகவ ராவ் ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில், ''வீர மரணம் அடைந்த பழனியை, அடக்கம் செய்யும் இடத்தில், நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என உறவினர்கள் தெரிவித்தனர்; பரிசீலனை செய்யப்படும்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-ஜூன்-202017:05:21 IST Report Abuse
Malick Raja வக்கற்ற ஆளுமையின் திறனின்மை ஒன்றின் காரணமாகவே சீனாக்காரனால் தாக்க முடிந்தது ..இரு நாடு ஒப்பந்தப்படி சுடக்கூடாதாம் .. அதனால் சீனன் நிரபராதியான நம் வீரர்களை இரும்புக்கம்பி கொண்டு தாக்கியழித்துள்ளான் .. சீனனுடன் தள்ளு முள்ளு செய்தபோது அடுத்த ரவுண்டில் நமது வீரர்கள் இரும்பு கம்பிகளுடன் நின்று அதற்க்கு அடுத்த ரவுண்டில் துப்பாக்கி உபயோகப்படுத்து இருந்திருந்தால் சீன வீரர்கள் 500.பேராவது கொல்லப்பட்டிருப்பர் .. வேரோடும் வேரடி மண்ணோடும் இந்திய மண்ணை ஆக்கிரமிக்கும் எண்ணத்தை அழித்தொழித்திருக்க வேண்டும்
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
19-ஜூன்-202020:03:45 IST Report Abuse
ocean kadappa india ஓய்வு வீரனுக்கு உரியதல்ல. அது தேவை எனில் மாற்று பணியில் செய்திருக்கலாம். சைனாக்காரன் கவர்டு .அவனிடம் நேர்மையான போர்க் குணம் இல்லை. வைரஸை பரப்பி விட்டு உலகை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு அழிவு நெருங்கி விட்டது.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
19-ஜூன்-202012:33:46 IST Report Abuse
Tamilnesan அறுபத்திரண்டாம் வருட போரில் இந்தியா வெற்றி பெற்றிருக்க வேண்டும். நேருவின் நரித்தனத்தால் இந்தியா சீனாவிடம் சரண் அடைந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X