அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் கொரோனாவில் அரசியல்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

விழுப்புரம் : 'கொரோனா விவகாரத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும்' என பா.ஜ., மாநில செயலர் ராகவன் கூறினார்.

விழுப்புரத்தில், நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தவும், நோயை முற்றிலும் ஒழிக்க துரித நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். கொரோனா விவகாரத்தில் ஸ்டாலின் போன்றவர்கள் தினம், தினம் அரசியல் பேசி வருவது வேதனையாக உள்ளது. மக்கள் அசாதாரண சூழ்நிலையில் உள்ள நேரத்தில் ஸ்டாலின் அரசியல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரி செய்ய 21 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து, அதற்கான திட்டத்தை வகுத்துள்ளது.

பா.ஜ., அரசு மூலம் பொருளாதாரம் புத்துயிர் பெற்று, 500 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளது. அதேபோல் இந்த ஆண்டு, 50 பில்லியன் டாலர் அன்னிய முதலீடு வந்துள்ளது.ஊரடங்கால் 80 நாட்களாக வாகனங்கள் ஓடவில்லை. இதனால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு குறைந்ததால், விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு ராகவன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X