வி.ஏ.ஓ.,க்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ.,க்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 18, 2020
Share

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு கர்ப்பிணிகள் உட்பட நேற்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 478 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்த மூதாட்டி இறந்ததால், இறப்பு எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் 458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 5 பேர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 101 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், சென்னையில் இருந்து திரும்பி வந்த விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் 17 வயது பெண். தென்நெற்குணத்தில் 30 வயது நபர். கீழ்மாவிளங்கையில் 30 வயது மற்றும் 31 வயது மின்வாரிய ஊழியர். ஒலக்கூரில் 28 வயது நபர். பரனுாரில் 35 வயது பெண்.மும்பையில் இருந்து திரும்பி வந்த 45 வயது நபர்.

தாதாபுரத்தில் 60 வயது நபர் மற்றும் அவரது மனைவி 42 வயது பெண். நாமக்கல்லில் இருந்து திரும்பி வந்த அகரம் சித்தாமூரில் 28 வயது நபர். சமூக தொற்றாக மணம்பூண்டியில் 40 வயது வி.ஏ.ஓ., வி.சித்தாமூரில் 23 வயது கிராம உதவியாளர்.அரகண்டநல்லுாரில் 42 வயது கிராம உதவியாளர். திருக்கோவிலுார் சந்தப்பேட்டையில் 41 வயது வி.ஏ.ஓ., ஒலக்கூரில் 40 வயது மற்றும் 39 வயது பெண். தானாங்குப்பத்தில் 16 வயது சிறுவன். கண்டாச்சிபுரத்தில் 52 வயது பெண் மற்றும் அவரது 19 வயது மகன் என நேற்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் பாதிப்பு 478 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா முன்னெச்சரிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் 743 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நோயில் இருந்து குணமடைந்த 7 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சுகாதாரத்துறை சிறப்பு மையங்களில் 541 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.ஒருவர் பலிஇந்நிலையில், விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி கடந்த 16ம் தேதி, காய்ச்சல், வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டார். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.ஆனால், பரிசோதனை முடிவு வருவதற்குள் நேற்று முன்தினம் மாலை 4:45 மணியளவில் அவர் இறந்தார். பின்னர், அன்று இரவு வந்த பரிசோதனை முடிவில், மூதாட்டிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அவரது உடல், விழுப்புரம் நகராட்சி முக்தி மின் தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது. இந்த மூதாட்டியின் இறப்பு குறித்து, நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதனால், இறப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.மேலும், விழுப்புரம் அடுத்த டி.மேட்டுப்பாளையம் சானாந்தோப்பில் 70 வயது மூதாட்டி உடல்நிலை பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த 15ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு நேற்று முன்தினம் மதியம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் மூதாட்டி இறந்தார்.ஆனால், இந்த மூதாட்டியின் இறப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும், இறந்த இரண்டு மூதாட்டிகளுக்கும் ஒரே பெயர் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X