சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி இயங்கிய கெஸ்ட் அவுசுக்கு போலீசார் சீல்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement
மரக்காணம் : கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பத்தில் தடையை மீறி இயங்கிய கெஸ்ட் அவுசுக்கு போலீசார் சீல் வைத்தனர். புதுச்சேரியை சேர்ந்தவர் சற்குருஜி, 40; இவர் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பத்தில் கெஸ்ட் அவுஸ் நடத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக, கெஸ்ட் அவுஸ்கள் இயங்க அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், சற்குருஜியின் கெஸ்ட்

மரக்காணம் : கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பத்தில் தடையை மீறி இயங்கிய கெஸ்ட் அவுசுக்கு போலீசார் சீல் வைத்தனர்.

புதுச்சேரியை சேர்ந்தவர் சற்குருஜி, 40; இவர் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பத்தில் கெஸ்ட் அவுஸ் நடத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக, கெஸ்ட் அவுஸ்கள் இயங்க அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், சற்குருஜியின் கெஸ்ட் அவுசில் 5 பெண்கள் தங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.டி.எஸ்.பி., அஜய்தங்கம் மேற்பார்வையில், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், கெஸ்ட் அவுசை சோதனை செய்தனர்.

அப்போது, சென்னையைச் சேர்ந்த 2 பெண்களும், புதுச்சேரியைச் சேர்ந்த 3 பெண்களும் அங்கு தங்கி இருப்பது தெரியவந்தது.இது குறித்து சற்குருஜி மீது வழக்குப் பதிந்த போலீசார், கெஸ்ட் அவுசுக்கு சீல் வைத்தனர். மேலும், கெஸ்ட் அவுசில் தங்கியிருந்த 5 பெண்களையும் தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X