ஆனி திருமஞ்சன விழா: கோவிலுக்குள் நடத்த முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆனி திருமஞ்சன விழா: கோவிலுக்குள் நடத்த முடிவு

Added : ஜூன் 18, 2020
Share
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள்ளேயே, ஆனி திருமஞ்சன விழாவை எளிமையாக நடத்த, கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழியில் ஆருத்ரா, ஆனி மாதத்தில் திருமஞ்சனம் ஆகிய இரு தரிசன விழா நடத்தப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம்

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள்ளேயே, ஆனி திருமஞ்சன விழாவை எளிமையாக நடத்த, கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழியில் ஆருத்ரா, ஆனி மாதத்தில் திருமஞ்சனம் ஆகிய இரு தரிசன விழா நடத்தப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடத்துவதில் சிக்கல் எழுந்தது.ஆனி திருமஞ்சன விழாவை கோவிலுக்குள்ளேயே நடத்த தீட்சிதர்கள் முடிவு செய்து, வரும் 19ம் தேதி கொடியேற்றம், 27ல் தேரோட்டம், 28ம் தேதி தரிசனம் நடத்த ஏற்பாடுகளில் இறங்கினர்.

இது தொடர்பாக, சிதம்பரம் சப் கலெக்டர் விசுமகாஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில், கோவிலுக்குள்ளேயே விழா நடத்தவும், ஆயிரங்கால் மண்டபத்திற்குள் சுவாமியை கொண்டு செல்லக் கூடாது, , அபிஷேகம் மற்றும் தரிசனம் நடத்த கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதை, தீட்சிதர்கள் ஏற்கவில்லை.இந்நிலையில், நேற்று கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் கூட்டம் நடந்தது. எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், சிதம்பரம் சப் கலெக்டர் விசுமகாஜன், டி.எஸ்.பி., கார்த்திகேயன் மற்றும் தீட்சிதர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், 'கோவிலுக்குள்ளாகவே எளிமையாக ஆனி திருமஞ்சன விழாவை நடத்த வேண்டும்.

பக்தர்களை உள்ளே அனுமதிக்க கூடாது, தீட்சிதர்கள் அதிக அளவில் கூடக் கூடாது' என, கலெக்டர் தெரிவித்தார்.மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகமுள்ளதால், அரசின் விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதை யடுத்து, தேரோட்டம் இல்லாமல், கோவிலுக்கு உள்ளேயே ஆனி திருமஞ்சன விழா நடக்க உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X