சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொதுமக்களுக்கு போலீஸ் அபராதத்துடன் அறிவுரை

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் வலம் வரும் பொதுமக்களுக்கு போலீசார் அபராதம் விதித்து அறிவுரை வழங்கினர். திருக்கோவிலுாரில் கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு என்பது பொதுமக்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது. முகக் கவசம் அணியாமல், இருசக்கர வாகனங்களில் 2 பேருக்கும் மேற்பட்டோர் பயணிப்பது. கடைகளிலும், பொது

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் வலம் வரும் பொதுமக்களுக்கு போலீசார் அபராதம் விதித்து அறிவுரை வழங்கினர்.

திருக்கோவிலுாரில் கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு என்பது பொதுமக்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது. முகக் கவசம் அணியாமல், இருசக்கர வாகனங்களில் 2 பேருக்கும் மேற்பட்டோர் பயணிப்பது. கடைகளிலும், பொது இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் செல்வதான் தனி மனித சுதந்திரம் என்ற நிலையிலேயே பலரும் வலம் வருகின்றனர். இதன் காரணமாக நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும் என்ற அபாயத்தை உணரவில்லை.

இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டி.எஸ்.பி., மகேஷ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் செல்வம் மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், உலகநாதன் மற்றும் போலீசார் ஏரிக்கரை மூளை, 5 முனை சந்திப்பு, கட்டை கோபுரம் உள்ளிட்ட இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, முகக் கவசம் அணியாமலும், 2 பேருக்கும் மேல் பயணம் செய்பவர்களையும் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இவர்களிடம் கொரோனா தொற்று அபாயம், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதன் அவசியம் குறித்து விளக்கிக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X