கடலுார் மத்திய சிறையில் 3 கைதிகளுக்கு கொரோனா| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுார் மத்திய சிறையில் 3 கைதிகளுக்கு கொரோனா

Added : ஜூன் 18, 2020
Share

கடலுார் : கடலுார் மத்திய சிறையில் மூன்று கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலுார் அடுத்த கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் 600க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். கடந்த மாதம் நான்கு கைதிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், சென்னை புழல் சிறையில் இருந்து கடந்த 14ம் தேதி கடலுார் மத்திய சிறைக்கு வந்த 30 வயது ஆயுள் தண்டனை கைதிக்கும், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 35 வயது ஆயுள் தண்டனை கைதிக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே போல், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த 41 வயது விசாரணை கைதிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர்.

சிறை வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டது. எண்ணிக்கை அதிகரிப்புகடலுார் மாவட்டத்தில் நேற்று மருத்துவ அதிகாரி உள்ளிட்ட 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 663 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இம்மாவட்டத்தில் கொரோனாவிற்கு ஏற்கனவே மூவர் உயிரிழந்துளளனர். இந்நிலையில், பெண்ணாடம் அஹ்ரகார தெருவைச் சேர்ந்த 72 வயது முதியவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் நேற்று இறந்துள்ளார். அவருக்கு தொற்று இருந்தது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X