பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தாசில்தார் நடராஜன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர்கள் சங்கராபுரம் திருமால், வடபொன்பரப்பி இளங்கோ, பேருராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் மற்றும் சங்கராபுரம், பாண்டலம், பகண்டை கூட்ரோடு வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். வியாபாரிகள் சங்க தலைவர் ரவி, மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், குசேலன், முர்த்தி பேசினர்.கூட்டத்தில் தாசில்தார் நடராஜன் பேசுகையில், 'கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக சங்கராபுரம் நகரில் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, கலெக்டர் உத்தரவின் பேரில் வியாபாரிகள் கடைகளை காலை 7:00 மணிக்கு திறந்து மாலை 3:00 மணி வரை வியாபாரம் செய்யலாம்.அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். டீ கடை மற்றும் ஓட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கக் கூடாது. அரசின் உத்தரவை பின்பற்றாத கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.வருவாய் ஆய்வாளர் தேவதாஸ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X