பொது செய்தி

தமிழ்நாடு

முறையான கண்காணிப்பு இல்லை காற்றில் கரைந்த கட்டுப்பாடுகள ்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் சமூக இடைவெளி இன்றி செயல்படுவது அதிகரித்து வருகிறது. பஸ், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி பயணிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், பலரும் முகக் கவசமோ, கையுறையோ அணிவதில்லை. அத்துடன் கடைகளில் பொருட்கள் வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியையும் கடைபிடிப்பதில்லை. 5 பேர் ஒன்று சேர்ந்து நிற்கக்கூடாது. சமூக இடைவெளியை பேணிக்காக்க வேண்டும். பைக்குகளில் ஒருவருக்கு மேல் செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன.ஆனால் நடைமுறைகள் எதுவும் கடுமையாக கண்காணிக்கப்படாததால் அறிவிப்புகளை காற்றில் பறக்க விட்டு எப்போதும் போல் இயங்கி வருகின்றனர்.

பைக்குகளில் 3 பேர் பயணிப்பது. முகக் கவசம் அணியாமல் இருப்பது. சமூக இடைவெளியை பேணிக் காப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் உள்ளனர். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் பொதுமக்களிடையே சமூக இடைவெளி பின்பற்றுவதை மிகக் கடுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X