பொது செய்தி

இந்தியா

'கொரோனா' நோயாளிகளுக்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
coronavirus, Laser treatment, AIIMS, Covid-19, கொரோனா, லேசர் சிகிச்சை

புதுடில்லி: 'கொரோனா' நோயாளிகளுக்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளித்து குணப் படுத்த எய்ம்ஸ் டாக்டர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 'ரேடியேஷன் ஆன்காலஜி' எனப்படும் கதிர்வீச்சு மூலம் புற்றுநோயை குணப்படுத்தும் துறைத் தலைவர் டாக்டர் டி.என்.ஷர்மா நேற்று கூறியதாவது: எய்ம்ஸ் தேசிய புற்றுநோய் மையத்தில் 50 வயதுக்கும் அதிகமான இரண்டு கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கதிர்வீச்சு மூலம் கடந்த 13ம் தேதி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர்களுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரை குணப்படுத்த அதிக அளவிலான கதிர்வீச்சுகள் பயன்படுத்தப்படும். ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு குறைந்த கதிர்வீச்சுகள் மூலமே சிகிச்சை அளிக்கப்படும். இந்த மொத்த சிகிச்சை நடைமுறைக்கு 15 - 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை.


latest tamil newsகடந்த 1940 ஆண்டுவரை நிமோனியா நோய்க்கான நோய் எதிர்ப்பு புரதங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததால் கதிர்வீச்சு மூலம் அதன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முதற்கட்ட ஆராய்ச்சியில் மேலும் எட்டு கொரோனா நோயாளிகளுக்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கவுள்ளோம். இதையடுத்து இந்த சிகிச்சை முடிவுகள் பகுப்பாய்வு செய்யப்படும்.

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை பலனளித்தால் இந்த ஆராய்ச்சி திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும். இந்த ஆராய்ச்சிகள் அமெரிக்கா ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகளிலும் செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnaraj - bangalore,இந்தியா
18-ஜூன்-202016:09:21 IST Report Abuse
krishnaraj People Must Not be Made Guinea Pigs
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-ஜூன்-202012:36:27 IST Report Abuse
A.George Alphonse இது ஒரு தேவையற்ற பரிசோதனை. காரோண வைரஸ் இறுதியில் நுரை ஈரலை தாக்கி சுவாசத்தை நிறுத்தி உயிரை கொல்லும். அதற்கு கதிர் வீச்சில் எப்படி தீர்வு ஆகும். இதனால் ஒரு பயனும் இல்லை. பணம் விரயம், உயிர் விரயம் மட்டும்தான்.
Rate this:
TechT - Bangalore,இந்தியா
18-ஜூன்-202013:47:49 IST Report Abuse
TechTRadiation corronavai kondruvudum ....
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
18-ஜூன்-202008:54:46 IST Report Abuse
Amirthalingam Shanmugam மருந்தோ,வாக்ஷினோ இன்னும் உறுதியாகாத நிலையில் தினமும் இதுபோல் ஒவ்வரு சோதனை முயற்சி மேற்க்கொண்டேபோனால் ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X