பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்ரூ.14 கோடியில் புதிய மகப்பேறு கட்டடம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 14 கோடி ரூபாய் மதிப்பில் 5 மாடி கொண்ட புதிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டுமான பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, தியாகதுருகம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக இயங்கிய நிலையில், கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உதயமான பின், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பல்வேறு புதிய சிகிச்சை பிரிவுகள் துவங்கப்பட்டு வருகிறது.

அதற்கேற்ப புதிய கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு ஏராளமான கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப் படுகின்றனர். இங்கு மாதம் தோறும் 250 முதல் 300 பிரசவங்கள் வரை நடக்கிறது.இதனால், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில் போதிய இடவசதியின்மையால் சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி பெண்கள் பலர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதனால், மகப்பேறு பிரிவினை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனையொட்டி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய மகப்பேறு மற்றும் குழந்தை நலப் பிரிவு கட்டடம் கட்டுவதற்கு 14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்தாண்டு பணிகள் துவங்கியது. 5 மாடிகள் கொண்டு அமைக்கப்பட்டு வரும் புதிய கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X