பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் விவசாயிகளுக்கு ஆலை அழைப்பு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

மூங்கில்துறைப்பட்டு : கரும்பு பயிரில் சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மாலதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மூங்கில்துறைப்பட்டில் இங்கிவரும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதிகளில் 2020-21ம் ஆண்டிற்கான பதிவு செய்யப்பட உள்ள கரும்பிற்கு வறட்சியிலிருந்து பாதுகாக்க சொட்டுநீர் பாசனம் மிக அவசியமானது.கரும்பு சாகுபடியில் நீர் சேமிப்பு வழிகளில் இது புதிய முயற்சி. இதில் விளைச்சலை அதிகப்படுத்தும் உத்திகளோடு தண்ணீர் சேமிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது.

நடப்பாண்டில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ஆலையில் பதிவு செய்து கரும்பு நடவு செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் அரசு மானியத்துடனும், ஆலையின் மூலம் சொட்டுநீர் பாசன வசதி அமைத்து தரப்படுகிறது. இதற்கென பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யும் பணிகள் ஆலையின் அனைத்து கரும்பு கோட்ட அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X